ஸ்ரீ அகத்திய காரண பஞ்சாக்ஷர மூல மந்திர சாதனை
ஸ்ரீ அகத்திய மகரிஷி சதாசிவரின் ஈசான முகம் எனப்படும் ஊர்த்துவ ஆம்னயத்திலிருந்து வித்யைகளைப் பெற்ற மகரிஷி.
ஸ்ரீ லலிதைக்கு அகஸ்தியமயி என்ற பெயர் உண்டு. இதன் அர்த்தம் அகத்திய ரூபத்தில் வருபவளே என்பதாகும்!
இத்தகைய அகஸ்திய மகரிஷியினூடாக சிவ அருளையும் குருவருளையும் கிடைக்கச் செய்யும் சாதனையே
ஸ்ரீ அகத்திய காரண பஞ்சாக்ஷர மூல மந்திர சாதனை.
இதன் மந்திரம் வருமாறு
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ
இதில் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்பது ஸ்ரீ லலிதையின் பீஜ மந்திரங்கள்
சிம் வம் என்பது சிவ என்பதன் பிந்து கூட்டிய மந்திர வடிவம்
அம் உம் மம் என்பது பிரணவத்தின் பிந்து கூட்டிய மந்திர வடிவம்
இந்த மந்திரத்தை தினசரி 108 இற்குக் குறையாமல் ருத்திராக்ஷ மாலையால் ஜெபித்து வாருங்கள்.
உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்.