திருமந்திரத்தின் முழுப் பொருளையும் உணர்ந்து சொல்லக்கூடியவர்கள் இன்று எவருமே இல்லை என்று ஒரு பெரிய எழுத்தாளர் குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கவலையுடன் பகிர்ந்திருந்தார். அந்தப் பயம் அவசியமற்றது.
உண்மைதான், 'நான்' என்ற கர்த்தா பாவத்தோடும், 'திருமந்திரம் என்பது நான் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்' என்ற துவைத (இரண்டான) மனநிலையோடும் அணுகும் எவருக்கும் அதன் உண்மைப் பொருள் பிடிபடாது.
ஏனெனில், திருமந்திரத்திற்குப் பொருள் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஆராய்ச்சி; ஆனால் திருமந்திரமாகவே மாறுவது என்பது அனுபவம் சார்ந்த யோகம்.
எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் பெரும்பாலும் 'திருமந்திரத்தில் என்ன இருக்கிறது?' என்று வெளியே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஆனால் நாம் இங்கு திருமந்திரத்தைப் படிக்கவில்லை; திருமந்திரத்தோடு வாழ்கிறோம்! அதனுடன் பயணிக்கிறோம். பரசிவ உணர்வில் ஏறுவதற்கு திருமந்திரத்தைப் பயன்படுத்துகிறோம்.
பரசிவம் திருமூலரின் தமிழ் வடிவில் நம்மை இயக்குகிறது, நாம் இயங்குகிறோம்.
அந்தப் பெருவெளிக்கு நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, பொருள் என்பது தானாகத் திறக்கும் ஒரு கதவு. அவ்வளவுதான்!"