1. தியானத் தொடக்கம் (Pre-Writing Meditation)
ஆசனம்: முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து, கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
தீர்க்க சுவாசம்: மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். உங்கள் பிராண ஆற்றல் சீரடைவதை உணருங்கள்.
குரு பாவனை: உங்கள் சிரசில் (சஹஸ்ராரத்தில்) திருமூலர் பெருமான் பொன்னிற ஒளியுடன் அமர்ந்திருப்பதாகப் பாவனை செய்யுங்கள். அவர் மூலமாக அகத்திய மாமகரிஷியின் ஊர்த்துவ முக ஆற்றல் உங்கள் சுஷும்னா நாடி வழியாகப் பாய்வதை உணருங்கள்.
2. எழுதும் போது செய்ய வேண்டிய பாவனைகள் (Visualizations)
இந்த நான்கு வரிகளையும் எழுதும்போது உங்கள் மனத்திரையில் கீழ்க்கண்டவாறு காட்சிப்படுத்துங்கள்:
வரி 1: "ஐந்து கரத்தனை யானை முகத்தனை"
பாவனை: விநாயகப் பெருமானின் திருவுருவம் உங்கள் மூலாதாரச் சக்கரத்தில் நிலைபெறுவதாக எண்ணுங்கள். 'ஐந்து கரங்கள்' என்பது பஞ்சபூதங்களை அவர் ஆளுவதைக் குறிப்பதாக உணர்ந்து எழுதுங்கள்.
வரி 2: "இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை"
பாவனை: பிறை நிலவின் குளிர்ச்சியான ஒளி உங்கள் ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மத்தியில்) படர்வதாகப் பாவனை செய்யுங்கள். அந்த ஒளி உங்கள் அறிவின் அறியாமையை நீக்குவதாக உணருங்கள்.
வரி 3: "நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்"
பாவனை: சஹஸ்ராரத்தில் அமர்ந்திருக்கும் திருமூலர் (நந்தி மரபினர்), உங்களுக்கு 'ஞானக் கொழுந்தை' (அறிவின் ஒளி) நேரடியாக வழங்குவதாகப் பாவனை செய்யுங்கள். குருவின் கருணை உங்கள் கை வழி மையாக இறங்குவதாக எண்ணுங்கள்.
வரி 4: "புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே"
பாவனை: உங்கள் புத்தி (புந்தி) ஒரு தூய சிம்மாசனமாக மாறுவதாகவும், அங்கே இறைவனின் திருவடிகளை நிரந்தரமாகப் பதிப்பதாகவும் ஆழமாகப் பாவனை செய்து இந்த வரியை நிறைவு செய்யுங்கள்.
3. ஷடத்வா இணைப்பு (The Connection)
இந்த மந்திரத்தை எழுதும்போது, இது உங்கள் வர்ண அத்வாவில் (எழுத்து) தொடங்கி, உங்கள் அகக் கோயிலின் (அரண்மனை) முதல் கட்டுமானக் கல்லாக மாறுவதை உணர்வுப்பூர்வமாக ஏற்கவும்.
4. தியான நிறைவு (Completion)
எழுதி முடித்ததும், பேனாவை வைத்துவிட்டு ஒரு நிமிடம் அமைதியாக அமரவும். சஹஸ்ராரத்தில் அமர்ந்துள்ள குரு திருமூலருக்கு இந்த முதல் கல்லைச் சமர்ப்பித்து, அவரது ஆசியைப் பெறுவதாகப் பாவனை செய்து கண்களைத் திறக்கவும்.
திருமூலரின் திருமந்திரம் என்பது ஒன்றாக இருந்த பரசிவம் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பதாகி பிரபஞ்சமாக விரிந்து தன்னை உணரக்கூடிய நிலையில் மானிட உடலினுள் செயல் கொள்ளும் முறையை விளக்கி, பின்னர் மீண்டும் ஒன்றாகிய பரசிவத்திற்கு செல்லும் வழியைக் கூறும் யோக ஆகம தந்திர நூல்.
இதை மனித உடலுடன் ஒப்பிட்டால் மேலிருந்து கீழாக பரசிவம் இறங்கி மனித உடலாகும் இறங்கு வரிசை
இது பரசிவம் மேலிருந்து கீழே இறங்கி வந்த வழி! ஆகவே மனிதன் தனது பயணத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என்றால்
என்ற ஒழுங்கில் ஏறுவரிசையில் செல்ல வேண்டும். ஆகவே மூலாதாரத்திற்கு வந்த பரசிவத்தினை வணங்கியே தனது அகப்பயணத்தை ஆரம்பிக்கிறார் திருமூலர். மூலாதாரத்திற்கு வந்த பரசிவத்தையே நாம் எல்லோரும் கணபதி என்று சொல்கிறோம். இனி மந்திரத்தைப் பார்ப்போம்;
யிந்து விளம்பிறை போலு மெயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியின் வைத்தடி போற்றுகின்றேனே
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
யானை முகம் உடைய பிள்ளையாருக்கு தும்பிக்கையுடன் ஐந்து கரம் உண்டு என்பது இதன் பொது விளக்கம், ஆனால் பரசிவம் செயல் நிலைக்கு சதாசிவமாக மாற்றமுறும் போது ஐந்து முகங்களாக பரிணமிக்கிறது. இந்த ஐந்து முகங்களும் ஐந்தொழில் எனும் பஞ்சகிருத்தியங்களுக்கு மூலமாக இருக்கும் அதேவேளை அவற்றை செயலாக்கும் நிலை கணபதியாக வருகிறது.
கரங்கள் செயலுக்குரியவை. சதாசிவ மூர்த்தம் ஐந்தொழிலிற்கு மூலமாக முகமாக இருக்கும் போது கணபதி ஐந்தொழிலிற்குரிய கரமாக மூலாதாரத்தில் இருக்கிறார்.
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை என்றால் சந்திரனின் இளம்பிறை போன்ற கொம்பினை உடையவர் என்பது பொதுப் பொருள். ஆனால் ஐந்தொழிலையும் செய்யும் சக்தி எங்கிருந்து வருகிறது, ஶக்தியிடமிருந்து தானே வர வேண்டும்! தேவியை சந்த்ராம் ப்ரபாஸ்யாம் என்கிறது ஸ்ரீ ஸுக்தம், சந்திர கலை கரங்களுக்கு சக்தியைக் கொடுக்கும் ஶக்தியின் வடிவம்.
ஆக கணபதியின் ஐந்து கரங்கள் சாதாசிவரைக் குறிப்பவை, இளம் பிறை போன்ற கொம்பு சக்தியைனைக் குறிப்பது. ஶிவ ஶக்தி ஐக்கிய ரூபம் கணபதி என்பது இந்த இரண்டு வரிகளாலும் மூலனார் உறுதிப்படுத்துகிறார்.
பயணத்தை மூலாதாரத்திலிருந்து மீண்டும் சஹஸ்ராரத்திற்கு ஆரம்பிக்க ஒருவனுக்கு இந்த செயல் புரியும் ஆற்றலைத்தரும் ஶிவ ஶக்தி ஐக்கிய ரூபமான கணபதியின் அருள் தேவை!
அடுத்த வரியில் அர்த்தம் மிகுந்த ஆழமானது, எம் எல்லோருக்கும் நந்தி என்பது சிவபெருமானின் வாகனம் என்றுதான் தெரியும். இங்கு ஒரு குழப்பம் வரலாம் நந்தியின் மகனா கணபதி என்று?
நந்தி என்பதற்கு ஆகம தந்திரங்களின் பொருள் இன்பம் என்பதாகும். ஆநந்தம் என்கிறோம் அல்லவா? நந்தினி என்றால் இன்பத்தைத் தருபவள் என்று பொருள்.
தெய்வங்களின் வாகனம் என்பது எமது மனம், உணர்வு அந்தக் குறித்த தெய்வ சக்தி எம்மில் வந்து அமர்வதற்குரிய நிலையைப் பண்புகளைக் குறிக்கும்.
இங்கு பூரண ஆநந்த வடிவமான சிவ ஶக்தி ஐக்கியமே நந்தி! அத்தகைய பூரண ஆநந்த விடிவான சிவ ஶக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடே கணபதி என்பதால் இங்கு நந்தி மகன்தனை என்று மூலர் சொல்கிறார்.
எமது பரசிவப் பயணம் மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்திற்கு செல்ல முதலாவது எமக்கு நடைபெற வேண்டியது ஞானம் எம்மில் துளிர் விடவேண்டும்.
கொழுந்து என்பது ஆரம்ப நிலை, வளர்ச்சியின் முதல் வெளிப்பாடு. சித்தர், ஆகம, தந்திர மரபுகளில்:
அதாவது: கொழுந்து என்பது வெளிப்படத் தொடங்கும் சுத்த சக்தி / ஞானத்தின் முதற்கதிர்.
ஒருவனுக்கு ஞானம் துளிர் விட முதலில் ஶிவ ஶக்தி ஐக்கிய ரூபமான கணபதியின் ஆற்றல் அவனிற்குள் வரவேண்டும்! அதுவே ஞானக் கொழுந்தினை!
இறுதி வரி இந்த கணபதியை எங்கு இருத்தி வழிபட்டால் எமக்குள் ஞானக் கொழுந்து துளிர்விடும் என்ற விபரத்தை திருமூலர் கூறுகிறார்.
புந்தியில் வைத்து — புந்தி என்றால் புத்தி என்று அர்த்தம், எது சரி என்று பகுக்கும் விவேகம் புத்தி! அதில் ஶிவ ஶக்தி அருள் சேர்ந்தால் எமக்கு பரஶிவத்தை நோக்கிச் செல்லும் ஞானம் உண்டாகும். அதே புத்தியை புலன்கள் வழி செலுத்தினால் குதர்க்கமும், அதீத கேள்வியால் குழப்பமும் உண்டாகும்!
ஆகவே புத்தி ஞானக்கொழுந்தாக துளிர்க்க வேண்டும் என்றால் அங்கு ஶிவ ஶக்தி ரூபமான கணபதி வந்து அமர வேண்டும்! எப்படி புத்தியில் அமர்த்துவது?
அடி போற்றுகின்றேனே — அந்த ஶிவ ஶக்தி ஐக்கிய ரூபமான கணபதியின் திருவடி எமது புத்தியுடன் தொடர்பு பட்டு நாம் எண்ணும் எண்ணம் எல்லாம் அந்த திருவடி வழிகாட்டுகிறது என்ற பாவத்தில் தியானிக்க வேண்டும்!
எப்படி அழகாக அகப்பயணத்தை ஆரம்பிக்க ஶிவ ஶக்தி ரூபமான கணபதியை புத்தியில் வைத்து எமது யோக சாதனையைத் தொடங்கவேண்டும் என்று கூறுகிறார் திருமூலர்!
அகண்ட ஒன்றான பரமசிவம் → பல்வேறு வெளிப்பாடுகள் → மறுபடியும் பூர்ண உணர்வாக திரும்புதல்.
இந்தப் பாடலில் எப்படி ஆன்மா பரசிவத்திலிருந்து பிரிந்து உடலிற்குள் செயற்பட்டு மீண்டும் உயர் நிலை அடைகிறது என்ற ஆன்ம பரிணாம சுழற்சியின் இரகசியத்தை அறிந்துகொண்டீர்களா?
இந்த பதிவு உங்களுக்கு புதிய புரிதலைத் தந்ததா?
இதில் புரியாத பகுதிகள் ஏதும் உண்டா?
உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்?