அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
திருமூலரின்
திருமந்திரம்
Thirumoolar's Thirumandhiram
அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனனின்
யோக ஆகம தந்த்ர அனுபவ விளக்கவுரை

ஒவ்வொரு மந்திரமும் சிவானுபவம் பெறும் இரகசிய சாதனை முறையுடன்

நீங்கள் திருமந்திரத்தை ஏற்கனவே அறிந்த வாசகரா?
அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர விளக்கவுரையை இங்கே வாசியுங்கள்
திருமந்திரம் வாசிக்க →
நீங்கள் திருமந்திரம் பற்றி எதுவும் அறியாமல் முதல் முதல் திருமந்திரம் படிக்க ஆர்வம் கொண்டவரா?
திருமந்திர தத்துவங்கள், யோக சாதனைகள் மற்றும் ஆன்மீக விளக்கக் கட்டுரைகள்
கட்டுரைகள் படிக்க →
நீங்கள் திருமந்திரத்தின் மூலம் சிவயோக சாதனை ஆன்ம பரிணாமம் வேண்டும் சாதகரா?
திருமந்திர சாதனையில் இணைந்து ஆன்ம பரிணாமம் அடையுங்கள்
சாதனையில் இணைய →
திருமந்திர ஞானத்தின் புதிய ஒலிவாசல்

ஒரு நிமிடம்… ஒரு ஞானவாசல்… ஒரு வாழ்வுப் பயணம்…

பல ஆன்மிக நூல்களை நாம் வாசிக்கிறோம்.
பல உரைகளைக் கேட்கிறோம்.
பல உயர்ந்த கருத்துகளையும் அறிந்துகொள்கிறோம்.

ஆனால் அவற்றில் எவ்வளவு நமது சிந்தனை, சொல், செயல் மற்றும் வாழ்க்கையாக மாறுகிறது?

திருமூலரின் மூவாயிரம் மந்திரங்கள் வெறுமனே வாசித்து அறிந்துகொள்வதற்காக எழுதப்பட்டவை அல்ல. அவை பொருளறிந்து கற்கப்பட்டு, பாவனையுடன் எழுதப்பட்டு, மௌனத்தில் உணரப்பட்டு, வாழ்வில் சாதனையாகப் பதிக்கப்பட வேண்டியவை.

இந்த ஞானப் பயணத்திற்கான ஒரு புதிய ஒலிவாசலாக—

திருமந்திர அரண்மனை ஞானவாசல் Podcast YouTube-ல் கேட்க →

எமது நோக்கம் வெறுமனே திருமந்திரத்தை வாசிப்பவர்களை உருவாக்குவது அல்ல.

திருமந்திரத்தை கருத்தறிந்து,

அதன் யோக இரகசியங்களை உணர்ந்து,

அதன் ஆகம நெறியைப் புரிந்து,

அதன் தந்திர நுணுக்கங்களை வாழ்வில் சாதனையாக மாற்றும்

சாதகர்களை உருவாக்குவதே எமது நோக்கம்.

📖
திருமந்திர வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள்
முதல் நிலை
🧘
திருமந்திர சாதகர்கள்
இரண்டாம் நிலை
🔥
திருமந்திர உயர் சாதகர்கள்
மூன்றாம் நிலை

இது ஒரு சாதாரண வலைத்தளம் அல்ல.

இது திருமூலர் அருளிய ஞானத்தை, நவீன மனிதனின் மனம், அறிவு, அனுபவம் ஆகியவற்றோடு இணைக்கும் ஒரு மெய்நிகர் குருகுலம்.

எமது உறுதியான இலக்கு:

ஒராயிரம் (1000) சாதகர்களை திருமூல குருபரம்பரையின் அடிப்படையில் திருமந்திரத்தை முழுமையாகக் கருத்தறிந்து கற்று, அதன் படி சாதனை செய்து, தமது வாழ்க்கையை மாற்றிய உயர் ஆன்மாக்களாக உருவாக்குவது.


எமது குருகுலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடையாது.

ஏனெனில் வித்யை விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்த மரபில், குரு அறிவை வழங்குகிறார்; மாணவன் தனது திறனுக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ப குருகுல தர்மத்தில் பங்குகொள்கிறான்.

குருகுலத்தின் பணிகள் தொடர, அதன் தேவைகள் நிறைவேற, மனமுவந்து பங்களிக்க விரும்புவோர் தங்களால் இயன்றதைச் செய்யலாம்.

இறுதியாக ஒரு கேள்வி:

பாரம்பரிய முறை
திருமந்திரத்தை
கற்களிலும், புத்தகங்களிலும்,
நூலகங்களிலும்
பாதுகாப்பது மட்டுமே
போதுமா?
அல்லது
உயிருள்ள மரபு
அதை மனிதர்களின்
மனதிலும், உணர்விலும்,
சிந்தனையிலும்,
சாதனையிலும்
உயிர்ப்பிக்க வேண்டுமா?

இந்த உயிர்ப்பிக்கும் பணிக்காகத்தான் திருமந்திர அரண்மனை உருவாகியுள்ளது.

திருமூலரின் திருமந்திரம் புத்தகங்களில் மட்டுமல்ல,
மனிதர்களின் வாழ்விலும் எழுதப்பட வேண்டும்.

அந்தப் பயணத்தில் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

அனைத்து பிரிவுகளும்

பாயிரம் + 9 தந்திரங்கள்

பகுதி 1 பாயிரம் மந்திரங்கள் 1 – 113 பகுதி 2 முதலாம் தந்திரம் மந்திரங்கள் 114 – 337 பகுதி 3 இரண்டாம் தந்திரம் மந்திரங்கள் 337 – 548 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 4 மூன்றாம் தந்திரம் மந்திரங்கள் 549 – 883 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 5 நான்காம் தந்திரம் மந்திரங்கள் 884 – 1418 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 6 ஐந்தாம் தந்திரம் மந்திரங்கள் 1419 – 1572 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 7 ஆறாம் தந்திரம் மந்திரங்கள் 1573 – 1703 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 8 ஏழாம் தந்திரம் மந்திரங்கள் 1704 – 2121 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 9 எட்டாம் தந்திரம் மந்திரங்கள் 2122 – 2648 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம் பகுதி 10 ஒன்பதாம் தந்திரம் மந்திரங்கள் 2649 – 3047 எழுத்துச் சாதனை மாணவர்களுக்கு மாத்திரம்
விளக்குனர் பற்றி

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்

Agasthiya Kulapathi Sri Shakthi Sumanan

குடும்ப வழி அகத்திய மகரிஷியை குருவாகக் கொண்ட யோக சாதகர்; காயத்ரி, ஸ்ரீ வித்யா உபாசகர்; சித்தர் பாடல்களின் யோக ஞான விளக்க உரையாசிரியர்.

திருமந்திரம் வெறும் கவிதை நூல் அல்ல — இது ஒரு யோக சாஸ்திரம். ஒவ்வொரு மந்திரமும் ஒரு தியான விதை. அதை நமது உள்ளே விதைத்தால் ஞானம் தானாக மலரும். — அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்

இன்றே தொடங்குங்கள்

திருமூலரின் ஞானத்தை உங்கள் தனிப்பட்ட ஆன்மீக பயணத்தில் கொண்டு செல்லுங்கள்

முதல் மந்திரம் →