அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 221

திருமூலர் படிக்கட்டு - 221

இருநூற்று இருபத்தொன்றாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 221

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று இருபத்தொன்றாவது படிக்கட்டில் (221) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வந் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
பருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றாரே. (221)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை