அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 290

திருமூலர் படிக்கட்டு - 290

இருநூற்று தொண்ணூறாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 290

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று தொண்ணூறாவது படிக்கட்டில் (290) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் றுலையாப் பெருமையை
எட்டுமென் னாருயி ராய்நின்ற வீசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. (290)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை