அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 330

திருமூலர் படிக்கட்டு - 330

முன்னூற்று முப்பதாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 330

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று முப்பதாவது படிக்கட்டில் (330) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

மயக்குஞ் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார்
மயக்குறு மாயையின் மாமாயை வீடு
மயக்கிற் றெளியின் மயக்குறு மன்றே. (330)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை