அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 239

திருமூலர் படிக்கட்டு - 239

இருநூற்று முப்பத்தொன்பதாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 239

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று முப்பத்தொன்பதாவது படிக்கட்டில் (239) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

கல்லா வரசனுங் காலனு நேரொக்குங்
கல்லா வரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா வரச னறமோரான் கொல்லென்பான்
நல்லாரைக் கால னணுகிநில் லானே. (239)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை