அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 266

திருமூலர் படிக்கட்டு - 266

இருநூற்று அறுபத்து ஆறாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 266

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று அறுபத்து ஆறாவது படிக்கட்டில் (266) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

வழிநடப் பாரின்றி வானோ ருலகங்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரு
மழிநடக் கும்வினை மாசற வோட்டிட்
டொழிநடப் பார்வினை யோங்கிநின் றாரே. (266)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை